Monday, October 25, 2010

பரந்த விளை நிலம் ஒரு மகா யோனி

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவை படிச்சு பதைச்சு வண்டை வண்டையா  கமெண்ட் போடறதுக்கு முந்தி சுகுமார்ஜி  மனிதன் என்பவன் வாழும் மிருகம்ங்கற வித்யாசமான பதிவை  போட்டிருக்காரு. அதை படிச்சு ஒரு வார்த்தை சொல்ட்டு போங்கண்ணா.

இப்போ மேட்டருக்கு வந்துருவமா? பூமியை தாய்ம்பாய்ங்க.மண் மாதாம்பாய்ங்க. ஒரு பாய்ண்ட் ஆஃப் வ்யூல இது நெஜம்தான். ஒரு வகையில நம்மையெல்லாம் பிரசவிச்சது இந்த பூமிதான். ஆனா தாய் மேலயே காதல் கொள்ற ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் மாதிரி மனிதனுக்கு இந்த பூமி மேல அளப்பரியாத காமமும் இருக்கிறாப்ல தோணுது. ( இன்னைக்கு நடக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர்  நில ஆக்கிரமிப்புக்கெல்லாம் இதான் காரணமோ என்னமோ?)

பழைய கற்காலம்,புதிய கற்காலத்துலருந்து மிருகபலம் அவனோட சஞ்சார வாழ்க்கையிலயும் தொடர்ந்திருக்கு.  ஆனா கண்ட நேரம் கண்டவளோட கூடி பிரிஞ்ச அதே மன நிலையில தான் இந்த மண் மங்கையையும் கையாண்டிருக்கான்.

ஸ்திர வாசத்துல, ஒரு குழுவா ஏற்பட்டு குழுவுக்குள்ளயே உடலுறவுகளும், குழந்தை பிறப்பும் ஏற்பட்டதால படிப்படியா ஆண்களோட ஆண்மை குறைஞ்சிட்டே வந்திருக்கனும்.

இருந்தாலும் விவசாயம்ங்கறது ஒரு உடலுறவுக்கிணையான இன்பத்தை அவனுக்கு கொடுத்திருக்கு.  ஆண்மையின் சிகரமா இருக்கிற ஆணுக்கு கேவலம் ஒரு பெண்ணின் கையளவு ........ மட்டும் திருப்தியை தரமுடியாது.  அவனுக்கு விசாலமான ...........தேவைப்பட்டிருக்கு அதான் நிலம்.

தன் உயிரைக்கொடுத்தாவது தன் துணையை காத்த மனித குலம், தன் துணையின் மானம், உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றாலும் நிலத்தை இழக்க துணிந்ததில்லைன்னு பார்க்கும் போது பெண்ணுக்கு இணையா, ஏன் பெண்ணை விட
உசத்தியா நிலத்தை நினைச்சிருக்காய்ங்க.

விவசாயம்ங்கறது  ஒரு உடலுறவு. ஆமாம். மனிதன் இந்த நிலமகளை எப்படியாவது மருவ  பார்க்கிறான்.  அந்த உள்மன எண்ணத்தின் வெளிப்பாடே விவசாயம்.

இந்த எண்ணம் மனித குலத்தின் எண்ணங்களிலேயே தொன்மையானது . சென்னை டீன் ஏஜ் காளைகள் இருட்டிய பின் பீச் மணலில்................வேணாம் பாஸ் தமிழ் மணம் மாதிரி  மிச்ச மீதி சைட் காரவுகளும் தடை  பண்ணிரப்போறாய்ங்க

ஆணில் ஆண்மை பொங்கிய காலத்தில் அவனுக்கு விவசாயம் ஒரு கூடல் போன்ற புளங்காகிதத்தை தந்தது. பெண்ணுடனான மிக குறுகியது . ஆனால் நிலமோ அப்படியில்லை. விரிந்து பரந்து வா வா என்று வரவேற்றது.

அவன் முயங்க இடம் கொடுத்தது. வஞ்சனையின்றி வாரி வழங்கியது. இவனும் தன் ரத்தத்தை வியர்வையாக்கி கொட்டி அவளை சூல் கொள்ள செய்தான். (மகசூல் என்ற வார்த்தையை கவனியுங்கள்)

இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது இந்த விளை நிலமே  ஒரு மகா யோனியோனு தோணுது. ( ஹும் வக்கிரம் பிடிச்சதுங்களுக்கு இப்படித்தான் தோணும்னு சொல்றது ஆருங்க) இன்னைக்கு வானளாவ எழுந்து நிக்கிற கட்டிடங்கள் எல்லாம் அவள் யோனியை மருவும் சக்தியற்று, செக்கெண்ணை அடங்கிய டப்பா வாய்க்கு மூடியாக உபயோகிக்கப்படும் வாழைத்தண்டுகளோ  என்று தோன்றுகிறது.
அவள் மேல் ஊற்றப்பட்ட தாரும், கான் க்ரீட் கலவைகளும் இதேசேதியைத்தான் எனக்கு தருது பாஸ்.

மனுஷன்ல உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். உள்ளதுனு சொல்ல தயக்கமா இருக்கு. ( இளைய தலைமுறை  எல்லாம்  சுய இன்பம், குட்கா, லாலா,மசாலா, டின் ஃபுட் ,ஜங்க் ஃபுட், போதை மருந்துன்னு மூழ்கி கிடக்கிறதை பார்த்தா தயக்கமாதான் இருக்கு.

நாட்ல வன்முறை தலைவிரிச்சாட காரணம் உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் தான். இந்த நிலை மாற பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்னு நானே எழுதியிருக்கேன்.

ஆனால் அந்த நாளோட ஒப்பிட்டா இந்த தேதிக்கு உள்ள  ஆண்மையெல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ஏன் இத்தனை வக்கிரம்னு யோசிச்சா.. நாம விவசாயத்தை விட்டு விலகி வந்துட்டதுதானோன்னும் தோணுது.

இன்னைக்கும் 70 சதவீதம் மக்கள் விவசாயத்து மேலதான் டிப்பெண்ட் ஆகியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் இன்னைக்கு நடக்கிறது விவசாயமான்னு எனக்கொரு சந்தேகம் உண்டு.

விவசாயம்ங்கறது ஒரு கூடல் மாதிரி நடக்கனும். மண்ணை முகர்ந்து,நக்கி , உதிர்த்து அதனோட பேசி, அதுல விழுந்து ,எழுந்து, படுத்து, உழுது, விதைச்சு பண்ற விவசாயம் எப்படி இருக்கும்.

இன்னைக்கு மண்ணை பரிசோதிக்க மண்பரிசோதனை நிலையம், என்ன விதைக்கலாம்னு சொல்ல ஒரு ஆள், என்ன உரம் போடலாம்னு சொல்ல ஒரு ஆள், உழுது போட ட்ராக்டர், இன்னைக்கு நடக்கிறது ரேப்புங்கண்ணா. அதுவும் கேங் ரேப்பு. அதுவும் ஆள் வச்சு பண்ற ரேப்பு.  அந்த பெண் என்னத்தை வாரி வழங்குவா?

மனிதன்  பசிச்சபோது தின்னு,  வீரியம் புரண்ட போது கூடி உடலளவுல வாழ்ந்த காலத்துல அவன் உடல் இயற்கையோட நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

எப்போ இவன் மனம்,புத்தி,அகங்காரம்னு அடுத்தடுத்த தளங்களுக்கு தாவினானோ அப்பமே இவனுக்கும் இந்த இயற்கைக்கும்  உள்ள தொடர்பு அறுந்தே போச்சு.

விவசாயத்துல ஈடுபட்டிருந்தப்போ அந்த நிலம் மாதிரியே இவன் மார்பும் ,மனசும் விரிஞ்சிருந்தது, எப்போ இவன் " நிலமெனு நல்லாள் நக"  பட்டணம் பார்க்க போனானோ எல்லாமே சுருங்கி போச்சு ( நீங்க நினைக்கிறதும் தான்).

எப்போ உடலுக்கு உழைப்பு குறையுதோ அப்போ புத்தி மெருகேறுது (அதுவும் குறுக்கு புத்தி) எப்போ மண்டை சூடு அதிகரிக்குதோ உடம்பு உருக ஆரம்பிக்குது. பலவீனம் தான் பாவங்களின் கங்கோத்ரி. தந்திரங்களின் தாய் வீடு.

என்னைக்கேட்டா அளப்பரிய  ஆண்மையுள்ளவன் செய்யக்கூடிய ஒரே தொழில் விவசாயம் . விவசாயத்தை பத்தி சிந்திக்கவோ, அதன் மேம்பாட்டுக்காக திட்டமிடவோ, நிலத்தில் இறங்கி உழைக்கவோ அளப்பரிய ஆண்மை தேவை.

இந்த பாழாய்ப்போன சாதீயத்தால, சாதிகளுக்குள்ளாறயே நடந்த திருமணங்களால, நெருங்கிய  சொந்தங்களில் நடந்த கலப்புகளால மூஞ்சில மீசையும் நெஞ்சுல ஆசையும் தான் இருக்கு. இந்த அழகுல விவசாயமாவது .. மக "சூலாவாது".

இன்னைக்கும் விவசாயம் மேல ஆர்வம் காட்டற பார்ட்டிங்க இருக்காய்ங்கன்னா அவிக தான்யா ஆண்பிள்ளை சிங்கங்கள். உதாரணமா  அகசூல் என்ற  இந்த வலைப்பூவை பாருங்க..

விவசாயம், தோட்டக்கலை,மூலிகைகள்  தொடர்பான  வலைப்பூக்கள் நடத்துபவர்கள் தங்கள் வலைப்பூவின் லிங்கை தந்தால் அவையும் இங்கு வெளியிடப்படும்