Sunday, March 18, 2012

ஜூலை 12க்கு மேல் இடைத்தேர்தல்


அண்ணே வணக்கம்ணே !
இனி ஒரு விதி செய்வோம்னுட்டு வாரத்துல 3 நாள் ஜோதிடம் - 3 நாள் நாட்டு நடப்புன்னு சொல்லியிருந்தேன். அதை கொஞ்ச நாளைக்காச்சும் பின்பற்ற ஆசை.

நம்ம கணிப்பு நிஜமாகி ஜூலை 12 க்கு மேல் மத்தியில / இலவச இணைப்பு மாதிரி எங்க ஸ்டேட்ல பை எலக்சன் வந்து அடுத்த சர்க்காராச்சும் பெட்டரான சர்க்காரா வருதான்னு பார்த்துக்கிட்டு இந்த விதியை தொடர்வதும் தொடராததும் பத்தி முடிவு பண்ணலாம்.

நம்ம நாட்டு நடப்பே இந்த அரசியல்வாதிகள் கையிலதான் இருக்கு. இவிகளை நினைச்சா ரெம்ப கவலையா இருக்கு. இவிக அல்லாம் தெரிஞ்சுத்தான் செய்றாய்ங்களா? இல்லை எதுனா குட்டிசைத்தான் இவிகளை ஆட்டி வைக்குதா புரியலை.

இவிக முடிவெடுக்கிறதை தள்ளி போடற விதம் - தப்பி தவறி எடுத்தா இவிக எடுக்கிற முடிவு - அதை செயல் படுத்தும் விதம் எல்லாமே பயங்கர கடுப்பா இருக்கு. ரெம்ப கவலையா இருக்கு.

விமானத்துக்கு போடற ஃப்யூயலுக்கு சப்சிடியாம் -ஆனால் மானில அரசு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கு போடற டீசலுக்கு சப்சிடி கடியாதாம்? விமானத்துல போறவன் மட்டும் தான் இந்தியன். பஸ்ஸுல போறவன்லாம் பாக்கிஸ்தானியனா?

பட்ஜெட்ல திட்டம் சாரா செலவு ( நான் ப்ளான் எக்ஸ்பென்டிச்சர்) ன்னு ஒரு வார்த்தை வரும் ( எத்தீனி பேரு கவனிச்சிங்க? கைய தூக்குங்கப்பா? )

இந்த வருசம் பட்ஜெட்டை ஒரு பறவை பார்வை பாருங்க:

பட்ஜெட் மொத்தம் : ரூ .14 லட்சத்து ,19 ஆயிரத்து ,925 கோடிகள்
திட்ட செலவு : ரூ.5 லட்சத்து ,21 ஆயிரத்து ,25 கோடிகள் ( 36.69 சதவீதம்)
திட்டம் சாரா செலவு : ரூ.9 லட்சத்து ,69 ஆயிரத்து ,900 கோடிகள் (68.30 சதவீதம்)

நாமளும் இன்டர்ல எக்கனமிக்ஸ், காமர்ஸ் ,டிகிரியில ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசினஸ் ஆர்கனைசேஷன்னுட்டு எல்லா இழவையும் எடுத்துட்டு தான் வந்திருக்கம். ஆனால் என் மேதாவிலாசத்தை காட்டி பயமுறுத்தறது நம்ம நோக்கமில்லை.

ரெம்ப டீப்பா கூட போகவாணாம் வாத்யாரே ..சொம்மா பேர் ராசிய வச்சே பார்ப்போம்.

திட்டச்செலவுன்னா என்ன?

பல காலமாகவோ - சமீப காலமாகவோ தன்னிறைவு அல்லது பொருளாதார முன்னேற்றம் இப்படி ஏதோ ஒரு டார்கெட்டை வச்சுக்கிட்டு பண்ணிக்கிட்டு வர்ர செலவு.

திட்டம் சாரா செலவுன்னா என்ன?
மேலே சொன்ன தன்னிறைவுக்கோ அ பொருளாதார முன்னேற்றத்துக்கோ சம்பந்தமில்லாம செய்யற செலவு.

சரி எல்லாம் நாம நினைச்சாப்லயே நடந்துருமா கொஞ்சம் அப்படி இப்படி சைடு வாங்கத்தான் செய்யும்னு சொல்விங்க. சைடு வாங்கினா பரவால்லை.

தாளி ..திட்டச்செலவென்னவோ ..ரூ.5 லட்சத்து ,21 ஆயிரத்து ,25 கோடிகள் தான் . ( 36.69 சதவீதம்)
திட்டம் சாரா செலவு ரூ.9 லட்சத்து ,69 ஆயிரத்து ,900 கோடிகள் (68.30 சதவீதம்)

திட்டச்செலவுக்கும் திட்டம் சாரா செலவுக்கும் வித்யாசம் 4 லட்சத்து , 48 ஆயிரத்து ,875 கோடி. இது உருப்படறதுக்கு அருத்தமா?

இதுல 1லட்சத்து ,85,ஆயிரத்து 752கோடி ரூ அளவுக்கு வேட்டி வேற விழுகுது..

திட்டச்செலவுக்கு ஒதுக்கின நிதியாச்சும் திட்டப்படி செலவழியுங்கறிங்களா? அஸ்கு புஸ்கு..

சரீ.. கவர்மென்டு பட்ஜெட் போடனும்னா பைசா வேணம்ல . அந்த பைசாவை எப்டி வசூலிக்கிறாய்ங்க தெரியுமா? வரி,வட்டி,திரை,கிஸ்தி ..

ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு ஊழல் நடந்துராம பார்த்துக்கறதுக்கு ஒரு பத்து காசு நி.செலவு , எப்படி உருப்படும்?

சரி எப்டி எப்டியோ சனத்தை ஏமாத்தி ஓட்டுவாங்கி பதவிக்கு வராய்ங்க பட்ஜெட் போடறாய்ங்க. நாசமாக்கறாய்ங்க - இதான் சன நாயகம்னு மனசை தேத்திக்கலாம்னு பார்த்தா.. பிரணப் முகர்ஜி யாரு? மேற்கு வங்க அரசியல்ல போனியாகாம சோனியா காலடியில சக்தி பூஜை பண்ற பார்ட்டி.

சரி ஒழியட்டும் சோனியா அம்மா என்ன பிரதமரா? சனம் சோனியா பிரதமர் ஆகனும்னா ஓட்டுப்போட்டாய்ங்க ? இல்லை..

அப்படி போட்டிருந்தா காங்கிரஸ் கட்சிக்கு டூ தேர்ட் மெஜாரிட்டி கிடைச்சிருக்கும். கு.பட்சம் யுபிஏ வுக்கு டூ தேர்ட் மெஜாரிட்டி கிடைச்சிருக்கும். கிடைச்சுதா? இல்லே.

அப்ப இதென்னத்த ஜன நாயகம் வெங்காயம்? கூட்டுங்கடா பார்லிமென்டை . சீக்ரெட் பாலட் வச்சு தேர்ந்தெடுங்கடா பிரதமரை .. அந்த பிரதமர் நியமிக்கட்டும் நிதியமைச்சரை. அந்த மந்திரி போடட்டும் பட்ஜெட்டை ..

கு.பட்சம் நாங்க ஓட்டுப்போட்ட எம்.பி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதமரும் -அவர் நியமனம் பண்ண நிதி மந்திரியும் எங்களுக்கு திதி வைக்கட்டும்.

ஆமா அரசியல்வாதிகளை பார்த்தா கவலையா இருக்குன்னு புலம்பறிங்க.. மக்களை பத்தி கவலையில்லியான்னு கேப்பிக ( நமக்கு இந்த கொழுத்த ,கொஞ்சமா கொழுத்த,மேல் தட்டு மத்திய வர்கம், மத்திய வர்கம் ஏன் ஏழைகளை பத்தி கூட பெருசா கவலையில்லை..ஏன்னா இன்னிக்கு இவிக வாழற நாய் பொயப்புக்கு இவிகதான் காரணம் (ஓட்டுப்போட்டாய்ங்கல்ல)

என்னோட கவலையெல்லாம் ஓட்டுப்போட கூட வாய்ப்பளிக்கப்படாத - ஓட்டுன்னா என்னன்னு கூட தெரியாத இந்த ஜன நாயக காட்டேரிக்கு ரத்த தானம் பண்ற மக்களை பத்தித்தான்.

அரசியல் - ஆமைவடைன்னு இந்திய எதிர்காலத்தை வடைகறியாக்கிக்கிட்டிருக்கிற இந்த பன்னாடை பரதேசிகளுக்கு நான் சொல்ல விரும்பறது ஒன்னைத்தான்..

1.கொய்யால உங்கள்ள ஆரு ஆளனும்னாலும் இந்தியா சுதந்திரமா இருந்தாவனும்
2.இங்கன பாதி மக்களாச்சும் உசுரோட இருக்கனும்
3.கு.பட்சம் கிரகவக்ர காலங்கள்ளயாச்சும் ஞானோதயம் வந்து நீங்க அறிவிக்கிற அரைவேக்காடு நலதிட்டங்களை அமல்படுத்தவாச்சும் சோர்ஸ் இருக்கனும் -சுமாரான நிர்வாகம் இருக்கனும்
4.பொடி நடையா ஊருக்குள்ள வந்து டீக்கடையில டீ குடிக்கிற அளவுக்கு இல்லின்னாலும் கு.ப உங்க அஃபிஷியல் ரெசிடன்ஸுக்குள்ள புகுந்து எவனும் தீபாவளி பண்ணிராத இருக்கனும்
5.மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் (அதுலயும் போலீஸு -மிலிட்டரி கூட கிளம்பியிருக்காய்ங்க) நீதிபதிகள் உங்க அதிகாரத்துக்கு சாவு மணி அடிச்சுராம இருக்கனும்.

இந்த அஞ்சு விசயத்தையாச்சும் மனசுல வச்சு நடத்துங்கப்பு உங்க அரசியலை..இல்லாட்டி ..

1.அடிமை இந்தியாவுல - அன்னிய ஆட்சியாளர்களோட அக்குளை நக்கி வாயனும். இங்கன உள் நாட்டு சனம் துப்புவாய்ங்க.

2.கொஞ்ச நாள்ள சனம் மொத்தம் சமாதி ஆயிரும். வேணம்னா ஆவிராஜ்ஜியத்தை ஆளலாம்

3.சுமாரான நிர்வாகம் கூட இல்லின்னா உங்க உசுருக்கும் சங்கு தாண்டி..

4.எந்த திருடனும் சைக்கிள் பெல் கப்புலதான் ஆரம்பிக்கிறான். அவன் தீவிரவாதி ரேஞ்சுக்கு போயிராம தடுக்கவாச்சும் சட்டம் ஒழுங்கை கா(ல்)ப்பாத்துங்கய்யா.

5 நீங்க .ஒளுங்கா அரசியல் பண்ணலை/ நிர்வாகம் பண்ணலைன்னு சாமி,சன்னியாசி ,பண்டாரம்,பரதேசி, அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் (அதுலயும் போலீஸு -மிலிட்டரி கூட கிளம்பிர சான்ஸிருக்கு. ஓட்டை மாத்தி மாத்தி போட்டு ஏமாந்த சனம் ஒரே வாட்டி (ஏ)மாத்திவிட்டுரப்போறாய்ங்க..