Wednesday, March 14, 2012

லக்னம்/லக்னாதிபதி பலப்படுவதால் தீமைகள்


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி பலம் பெறலின்னா டாரா கிளிஞ்சுரும்னு நானே பல சந்தர்ப்பங்கள்ள சொல்லியிருக்கன். ஆனால் அந்த சீக்வென்ஸ்ல கண்ணாலம் பத்தியோ - மேரீட் லைஃபை பத்தியோ முக்கியமா ஆன்மீகத்தை பத்தியோ பாய்ண்டே ரெய்ஸ் ஆகியிருக்காது.

லக்னாதிபதிங்கறவர் எந்த அளவுக்கு பலம் பெற்றால் ஜாதகருக்கு அந்த அளவுக்கு செல்ஃப் என்ற "சுயம்" இருக்கும்.

இதை இந்த உலகத்துல அன்னாட பொயப்புக்காக "என்னா வேணம்னா" செய்ய தயாரா இருக்கிற அல்லக்கைங்க புரிஞ்சுக்காது. இதை அகங்காரம் -ஈகோன்னு சொல்லிருவாய்ங்க. மத்த கிரகங்கள் பேர் சொல்லும் நிலையில இருந்து இந்த ஜாதகர்கள் சொந்த தொழில் -சொந்த வியாபாரம் கு.பட்சம் ஒரு டீம் லீடர்,டிப்பார்ட்மென்டல் ஹெட் மாதிரி செட்டில் ஆயிட்டா பிரச்சினை வராது.

மத்த கிரகங்கள் ஆப்படிச்சிட்டிருந்தா பார்ட்டி என்னவோ சாதாரண லேபரா இருப்பான். ஆனால் அவனோட செல்ஃப் /சுயம் பக்காவா இருக்கும். லக்னாதிபதி நைசர்கிக சுபனாக இருந்து லக்னாத் பாபனாக இருந்தா தப்பு தண்டாவுக்கு போகமாட்டான். ஆனால் எவனும் இவனை நம்பமாட்டான். இவன் லைஃபே ஒரு பேத்தடிக் ஸ்டோரியா இருக்கும்.

லக்னாதிபதி பாபனா இருந்து -லக்னாத் சுபனாக இருந்தா தப்பு தண்டால்லாம் துணிஞ்சு செய்வான்.ஆனால் அதுலயும் "போட்டு கொடுங்க முதலாளி"ங்கற ஸ்டைல் எல்லாம் இருக்காது. லையன்ஸ் ஷேர் தான் டிமாண்ட் பண்ணுவான்.

நேரம் நல்லாருக்கிற வரை ஓகே. நேரம் கெட்ட நேரத்துல லையன்ஸ் ஷேர் கேட்டா ஆப்படிச்சுருவாய்ங்க. இது தொழில்,உத்யோகத்தை பொருத்தவரை உள்ள நிலை.

நாம எடுத்துக்கிட்டு பிரிச்சு மேஞ்சுக்கிட்டிருக்கிற சப்ஜெக்ட் "திருமணதடை -திருமண வாழ்வில் சிக்கல்-ஆண்மை இழப்பு - தன் சுகத்துக்கு தானே தடையாதல் -ஜாதகம் எப்டியிருந்தாலும் மேற்படி சமாசாரங்களுக்கு தானே ஆப்படிச்சுக்கறது.

இந்த வரிசையில லக்னாதிபதி எங்கல்லாம் இருந்தா ஜாதகர் எப்படி சொந்த செலவுல சூனியம் வச்சுக்குவாருன்னு பார்த்துக்கிட்டே வந்தோம். இதுல லக்னாதிபதி 7 ல நின்னா என்ன கதைன்னு பார்த்தோம். லக்னாதிபதி 7 ல நின்னா "பொஞ்சாதி முந்தானைய பிடிச்சுக்கிட்டு அலையனும். இவனோட பிரபஞ்சத்துல பொஞ்சாதிதான் மையப்புள்ளி"

ஒரு வேளை இவன் ஜாதகத்துல லக்னாதிபதி உச்சமாகி ஏழை பார்க்கிறாருன்னு வைங்க அது அவரோட நீச வீடா இருக்கும்.

ஒதகாத பார்ட்டிய கண்ணாலம் கட்டி - அது இல்லாத. பில்டாப் எல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கும். இவனா பயங்கர ஈகோயிஸ்ட். என்னாகும்ங்கறிங்க?

ஒரு வேளை இவன் ஜாதகத்துல லக்னாதிபதி நீசமாகி ஏழை பார்க்கிறாருன்னு வைங்க அது அவரோட உச்ச வீடா இருக்கும். வீட்டோட மாப்ளை கேஸ் எல்லாம் இப்படி இருக்க வாய்ப்பிருக்கு. இதுக்கும் மத்த கிரகங்களோட ஒத்துழைப்பு தேவை. அது இல்லின்னா கோசாரத்துல ஒரு ரெண்டரை வருசம் சனி நெல்லா இருக்கறச்ச கண்ணாலமாகி சனி அடுத்த ராசிய பார்க்கிறப்பவே மாமனரோட/மச்சினனோட முட்டிக்கிட்டு -
அல்லது மச்சினிச்சியை கை வைக்க பார்த்து ரோட்ல வந்து கிடக்கவும் வாய்ப்பிருக்கு. தரித்திரனுக்கு வாய்வு வந்தா அர்தராத்திரியில குடைபிடிப்பாங்கற கதையாயிரும்.

இது கொள்கை ரீதியிலான கணிப்புத்தான் புருசன் -பொஞ்சாதி ஜாதகங்களை பக்கத்து பக்கத்துல வச்சிக்கிட்டு தோஷங்கள்,குரு ,சுக்கிர பலம், 7 ஆம் பாவம் ,பெண் ஜாதகத்துல 8 ஆம் பாவம் இப்படி எல்லாத்தையும் பார்த்து சொல்லோனம்.

இங்கன நாம சொல்லவர்ர பாய்ண்ட் ஒன்னுதேன். லக்னாதிபதி பலம் பெற்றால் சொந்த தொழில் வியாபாரத்துல இருந்தா பரவால்லை. ( இவிகளும் BUYERS ,OFFICERS,BANKERS இத்யாதி ஆசாமிகள் கிட்டே கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு பேசவேண்டியிருக்கும். இல்லாட்டி பல்புதேன்)

இதை எல்லாம் ஃபாலோ பண்ணி தொழில் வியாபாரத்தை மேக் அப் பண்ணிட்டாலும் கண்ணாலம்ங்கற விசயத்துல வரும்போது..

எவளோ வருவாளாம் , அவளுக்கு கட்டில்ல பாதியை ஒதுக்கிரனுமாம். ராத்திரி பத்துக்கெல்லாம் வீட்டுக்கு போகனுமாம், அவளை பெத்தவுக வருவாய்ங்களாம் நாம எத்தீனி டென்சன்ல இருந்தாலும் வாங்க மாமா ,வாங்க அத்தை பிரயாணம் சௌகரியமா இருந்ததான்னு கேட்கனும் -இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டுக்கிட்டு நமக்கு வாணான்டாப்பா இத இழவெடுத்த கண்ணாலம்னு தேன் தோனும்.

இவிக கண்ணால சப்ஜெக்டை இப்படியே விட்டு தொலைச்சு தலை முழுகிட்டாலும் பரவால்லை. அப்பன் ஆயி, வேலை வெட்டி இல்லாத சித்தப்பு,மாமன் நச்சரிப்பு தாங்காம கண்ணாலம் கட்டிக்கிட்டா அது இவிகளுக்கும் நரகம்.வர்ரவுகளுக்கும் நரகம்.

வர்ர கேஸு பிலோ ஆவரேஜ் ஜாதகம், லோ ஒல்ட்டேஜ் ஜாதகம்னா பரவால்லை. அதுவும் கொஞ்சம் போல விஸயம் இருக்கிற ஜாதகமா இருந்தா "டக் அஃப் வார் "ஆரம்பமாயிரும்.

மேரீட் லைஃப் கூட பரவால்லை. "ஊரு உலகத்துல முக்கா வாசி புருசன் பொஞ்சாதி இப்படித்தானே இருக்காய்ங்க"ன்னு அஜீஸ் பண்ணிட்டு போயிருவாய்ங்க. ஆனால் கில்மா மேட்டர்ல இந்த சுயம்,சுய மரியாதை ,ஈகோ , இழவுன்னு பார்த்தா அசலுக்கு மோசம் வந்துரும்.

லக்னாதிபதி உச்சமா இருக்கிறவுக:

அந்த கிரகம் தொடர்பான தொழில் ,வியாபாரத்தை கு.ப சைட் பிசினஸாவாச்சும் மேற்கொண்டா பேய்க்கு வேலை கொடுத்த கணக்கா அந்த கிரகத்தோட வாக்குவம் குறையும். இவிக ஈகோவும் தேன். உங்க நினைப்பு படி நீங்க எதிர்கால எம்.எல்.ஏ ன்னே வச்சுக்குவம். ஒரு வேளை நாளைக்கு தேர்தல்ல நீங்க நின்னப்ப உங்க பொஞ்சாதியே உங்களுக்கு ஓட்டு போடலின்னா எம்பூட்டு அசிங்கம்? ரோசிச்சு பாருங்கண்ணே..

லக்னாதிபதி நீசமானவுக:

அந்த கிரகம் தொடர்பான தொழில் வியாபாரத்துல இருந்தா கொஞ்சம் கொஞ்சமா விலகிரனும். இல்லாட்டி அந்த கிரக காரகம் கொண்ட நோய்கள் வேற வாட்டும். அந்த கிரகம் தொடர்பான நிறம் கொண்ட பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் உபயோகிக்கலாம். நைட் ட்ரஸ் மேற்படி நிறத்துல இருந்தா உத்தமம்.

நாளைக்கு லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னாகும்? என்ன செய்யலாம்னு பார்ப்போம். உடுங்க ஜூட்.

நேத்திய பதிவை பார்க்காதவுகளுக்கு மறு அறிவிப்பு:

இனி திங்கள்,செவ்,புதன் அரசியல் ,நாட்டு நடப்பு பற்றிய பதிவுகள்

வியாழன்,வெள்ளி ,சனி கிழமைகள்ள மட்டும் தான் சோசிய பதிவுகள்.