Tuesday, July 24, 2012

சில காட்டமான கேள்விகளும் -என் பதில்களும்

அண்ணே வணக்கம்ணே !
கொய்யால ஒரு பதிவுக்கே சிங்கியடிச்சுக்கிட்டிருந்தம். எப்படியோ உங்கள் ஆயுள்பலம் எப்டி மினி தொடருக்கான 6 ஆவது அத்யாயத்தை ஒப்பேத்தியாச்சு.

போது போகாம அனுபவஜோதிடம் சைட்டுக்கு வந்த பழைய கமெண்டுகளை படிச்சுக்கிட்டிருந்தப்போ - ரஞ்சன் என்ற பிரிட்டானியா காரரு சில காட்டமான கேள்விகளை எல்லாம் கேட்டிருந்ததை பார்த்தேன்.

சில கமெண்டுகளுக்கு விளக்கமா பதில் தரனும்னு நினைச்சு பிறவு மறந்து போறது வழக்கம். அப்படி விடுபட்ட கமெண்ட் அது. அதுக்கான பதிலைத்தான் இன்னைக்கு பதிவா படிக்க போறிங்க. உடுங்க ஜூட்..


1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
கடவுளை நம்பாதவன் கூட ஜோதிடத்தை நம்பறானே. கடவுள் பேரை சொல்லி ஏமாத்தறவனை விட ஜோதிடத்தின் பேரால் ஏமாத்தறவுக நெம்பர் அதிகமா இருக்கே.

கடவுளையும் -ஜோதிடத்தையும் மனிதர்களின் நினைவிலி மனம் நம்புகிறது.அதற்கும் முற்றும் உணர்ந்த ஆன்மாவுக்கு கூப்பிடு தூரம் தான். அதுக்கு எப்பயோ இந்த ரெண்டு மேட்டரும் அவெய்லபிளா இருந்திருக்கு.அதனாலதான் இப்பயும் தேடி ஓடுது.

2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?
ஒன்னும் ஆகாது. நடக்கவேண்டியது நடந்துக்கிட்டே இருக்கும். ( நாம கடியாரத்தை பார்க்காட்டாலும் அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே தானே இருக்கு)

3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை.
அது பொய்த்தால் ஜோதிடனின் சிறுமை

4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?
அந்த ஜோதிடரின் " நான்" ஜோதிடத்துக்குள் பிரவேசிப்பதால் ஏற்படும் மாற்றம் இது. நான் விலகி நின்னாதான் எதிர்காலம் தரிசனம் கொடுக்கும்.

5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ஹ்யூமன் மைண்ட்ல ரைட் லெஃப்டுன்னு டிவிஷன்ஸ் இருக்காம். படத்தை பார்க்கிறது லெஃப்ட் டிவிஷன்.அது லாஜிக் பார்க்காது.

பாடத்தை புரிஞ்சிக்க பார்க்கிறது ரைட் மைண்ட் அது லாஜிக் பார்க்கும்.

அந்த காலத்துல சனங்களுக்கு லெஃப்ட் மைண்ட் நெல்லா வேலை செய்தது.அதுக்கு படம் காட்டனும். படம் காட்டி கதை சொல்லனும்.அப்பத்தான் ஏத்துக்கும்.

அப்படி படம் காட்டி சொன்ன கதைதான் அது.


7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

மழை கூட இயற்கையாதான் பொழியுது.அப்ப எதுக்கு வானிலை அறிவிப்பு மையம்? குடை கொண்டு போகலாம்னுதானே.. கடலுக்குள்ள மீன் பிடிக்க போகாம இருக்கலாம்னு தானே

8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

ஜோதிடம் பொய்க்க பல காரணம் உண்டு. ஜோதிடர் டுபாக்கூரா இருக்கலாம். உங்க பிறப்பு விவரங்கள் தவறா இருக்கலாம். மேன்யுவலா கணிக்கும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஜோதிடர் கிரகங்களின் பலத்தை கணிப்பதில் கோட்டை விட்டிருக்கலாம்.
மேற்சொன்ன காரணங்கள் இல்லாமலும் ஜோதிடம் பொய்க்கிறது. காரணம் ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்..


9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

நியாயமில்லைதான் . உங்களுக்கு நம்ம நவீனபரிகாரங்களை பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்

10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?
ஒரு க்யூரியாசிட்டி தான். முன்னாடி தெரிஞ்சுக்கிட்டு முன் கூட்டியே கவலைப்படலாம்ங்கறது மசாக்கிசம் தான்.

11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?
இது "அவாளுக்கு" போக வேண்டிய கேள்வி.

12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?
சகுனம் பலதும் ஒர்க் அவுட் ஆகியிருக்கு (நம்ம அனுபவத்துல) ராகுகாலம்னா ஞா கிழமை மட்டும் நிறைய தாட்டி பல்பு வாங்கியிருக்கோம். மத்த மேட்டர்ல நானும் உங்க கட்சிதான்.

13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

சத்தியமா நியாயமில்லை. இதுக்கெல்லாம் செமர்த்தியான,அயனான லாஜிக்கல் ரெமிடீஸ் தந்திருக்கேன். நம்ம சைட்டை துழாவுங்க.

14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?
தெரியாதுங்ணா.. இதையெல்லாம் நாம ஃபாலோ பண்றதே கடியாது.

15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்?
தவறா சொன்ன டயத்துக்கு கரீட்டா பொறந்தவுகளுக்கு அந்த பலன் நடக்கும்.

16. பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

இதை பத்தி நிறைய எழுதியிருக்கேங்ணா சைட்ட துழாவுங்க..

- ரஞ்சன், பிரிட்டானியா