Wednesday, November 7, 2012

உங்க வண்டி நெம்பரும் பலனும்

அண்ணே வணக்கம்ணே  !

எதை எழுத நினைச்சாலும் ஒன்னு ஏற்கெனவே எழுதிட்டாப்ல ஞா. அல்லது தொடரா ஆரம்பிச்சு பாதியில விட்டதா ஞா. நாம  தொடாத சப்ஜெக்டு எதுன்னு முக்கி ரோசிச்சதுல இந்த வண்டி சமாசாரம் ஸ்பார்க் ஆச்சு.

ஏற்கெனவே சொல்லியிருக்கன். நாம இந்த சோசிய மேட்டர்ல ஒரு சைன்டிஸ்டு மாதிரி.எதையும் ஆராய்ச்சி பண்ணி -அப்ளை செய்து -பலனை கண் கூடா பார்த்த பிறவுதேன் பிறருக்கு உபதேசிக்கிறது வழக்கம் இந்த வண்டி
வாகன மேட்டர்ல நமுக்கு ஆர்வம் வந்ததே 12 வருசத்துக்கு மிந்திதேன்.

டாக்டர் அக்பர் கவுசர் கிட்டே ட்ரான்ஸ்லேட்டரா வேலை செய்து -அங்கருந்து கழண்டுகிட்டு 407 வேன் காரவுக கிட்டே சரண் புகுந்தோம். எல்லாரும் ஓனர்ஸ் கிடையாது.அதுல ட்ரைவர்,க்ளீனர் இத்யாதியினரும் இருப்பாய்ங்க. ஜாதகம் இருக்காது , சரியான பர்த் டீட்டெய்ல்ஸ் இருக்காது.. Essantisality is the Mother of inventions ஆச்சே..

அவிக கிட்டே பக்காவா இருக்கிறது அவிக 16 மணி நேரம் மாரடிக்கிற வண்டி வாகனத்தோட நெம்பருதேன்.அதை வச்சு ஏன் பலன் சொல்லக்கூடாதுன்னு ஒரு ஸ்பார்க். ஒடனே அப்ளை பண்ண ஆரம்பிச்சோம்.

மொதல்ல அந்த எண் அவிக லைஃபை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணியிருக்கான்னு தெரிஞ்சுக்க வேண்டியது. அது பாசிட்டிவா நெகட்டிவா அசெஸ் பண்ணிக்க வேண்டியது. பாசிட்டிவா இருந்தா அந்த பலன் அதிகரிக்க சில டிப்ஸ். நெகடிவா இருந்தா அந்த பலன் குறைய டிப்ஸ். இப்படி ஆறேழு மாசம் நீண்ட நெடும் ஆராய்ச்சி.

அந்த காலகட்டத்துல சொந்த வாகனம்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.எப்படியோ ஊர் பிள்ளைகளை கிணத்துல தள்ளி ஆழம் பார்த்தாச்சு.

இந்த அனுபவம் நம்ம லொடக்கானி பஜாஜ் சன்னியை ஜெயிக்க உதவினது சாதனை தேன். இப்பம் ரெண்டாவதா ஒன்னை வாங்கி அதையும் ஒர்க் அவுட் பண்ணிட்டம்.

உங்க எண்ணுக்கான பலனை சொல்றதுக்கு மிந்தி உங்களுக்கு நம்பிக்கை பிறக்க இந்த அனுபவம்.( ஹி ஹி அப்டி சொன்னாத்தேன் சொந்தகதைய கேப்பிக)

வண்டி நெம்பரோட டோட்டல் 47 . 4 = ராகு ,7 =கேது இதை கூட்டினா 11 .இதையும்சிங்கிள் நெம்பராக்கினா 2. ராகுன்னா துர்கை .துர்கைக்கு வேப்பமரம் விசேஷம். நாம வேப்பமரத்து வீட்ல இருந்தப்பதேன் இதை வாங்கினோம்.

ராகு வெளி நாட்டு தொடர்புகளுக்கு முக்கிய கிரகம். இந்த வீட்ல இருக்கிறச்சதேன் நெட் கனெக்சனே வாங்கினோம். ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சுருச்சு.( ஜாதகத்துல ராகு 10 ல) .

ஜோதிடம்ங்கறது ஆன்மீகத்தின் முதல் படிங்கறது நம்ம பஞ்ச். அடுத்த படியையும் டச் பண்ண ஆரம்பிச்சோம். அதுலயும் டைரக்டா யோகம் . ( 4 ல் கேது)

பல மாசம் ஹவுஸ் ஓனர் கரண்ட் பில்லையும் நாம கட்டிக்கிட்டிருந்தம். அவருக்கு ரெண்டாவது பைபாஸ் நடந்தது வேற கதை . ( வறுமைய தர வேண்டிய 4 ல் செவ்  இப்படி பரிகாரமாயிட்டாரு. செவ்= மின்சாரம் ,செவ்= அறுவை சிகிச்சை)

லோக்கல்ல மல்ட்டி கலர் ஆட் பேஸ்ட் மேகசின் செலாவணியில இருந்தது. நாம நெம்பர் டூவா தான் இருந்தம். நெம்பர் ஒன்னாயிட்டம்.

எல்லாம் பாசிட்டிவா இருந்தா எப்படி? டோட்டல் 2 வர்ரதால - ( 2 = சந்திரன் ) வண்டி மேட்டர்ல மட்டும் பயங்கர இன்ஸ்டெபிலிட்டி, அன்சர்ட்டெனிட்டி,ஆங்சைட்டி.

தாளி எப்ப ஓடும்.எப்ப நின்னுரும்னே தெரியாது. ரெண்டேகால் நாளைக்கு ஒரு புது பிரச்சினை வரும். ரிப்பேருக்கு மட்டும் ரூ.2000 வரை செலவழிச்சுருப்பன்.

சுண்டைக்கா கால் பணம் சுமைக்கூலி முக்காப்பணம் -துடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம்னு கமெண்ட் போட்டுராதிங்க.

இவ்ள செலவழிக்க ஒரு காரணம் இருக்கு. பக்கத்து சந்துல வில்லங்கம் காத்திருக்குன்னா இந்த சந்துலயே நின்னுரும். நாம அடிச்சு பிடிச்சு ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு பக்கத்து சந்துக்கு போனா " சாமி ! இன்னாய்யா வெத்திலையில மை போட்டு பார்க்கிறியா என்ன.. இவ்ளோ நேரம் அந்த மொக்கை பார்ட்டி உனக்காக வெய்ட்டிங். இப்பத்தான் அவன் அப்படி போனான். நீ இப்ப வரே"ம்பாய்ங்க.

ஒரு தாட்டி நிப்பாட்டி ஸ்டாண்ட் போடறச்ச ப்ரேக் ஒயர் படக். (ஓடும்போது அறுந்திருந்தா என்ன கதி?)  அரை ஸ்பூன் பெட் ரோல் இருந்தாலும் வீட்ல கொண்டு வந்து சேர்த்துரும்.

இது வந்த ராசி இன்னொரு வண்டியும் வாங்கியாச்சு (இது மகளுக்கு இதனோட நெம்பர் 19 . இந்த கதை இன்னொரு சந்தர்ப்பத்துல)

இந்த சென்டிமென்ட்ல ஸ்பானர் பிடிச்சவன்லாம் மெக்கானிக்குன்னு செமை செல்ஃப் ஷேவிங் +மொட்டை.
ஒரு நாள் திடீர்னு ஸ்பார்க் ஆச்சு. முழு நிலவுல ஒரு மீன் துள்றாப்ல ஸ்டிக்கரிங் பண்ணிட்டம் . ( 2= சந்திரன் சந்திரன் =கடல் -மீன் கடல்லதானே இருக்குது )

சீமான் மாதிரி ஒரு மெக்கானிக் மாட்ட ஒரே ஒரு 100 ரூவா செலவுல அல்ட்டிமேட் சொல்யூஷன். மாசக்கணக்கா  நோ ப்ராப்ஸ். சீதா சல்தா. ஒரு குரங்கு அந்த ஸ்டிக்கரை பிச்சுப்போட்டுருச்சு. ஷாக் அப்சர்பர்ல பிரச்சினை வந்துட்டு சீமான் கிடைக்காம் பஞ்சர் கடை பாய் ஒருத்தரை வச்சு எல்லாத்தையும் கழட்டி ஏறக்குறைய "புதுப்பேட்டை"மாதிரி குமிச்சு வச்சுட்டம்.

ஸ்ப்ரிங்கா கிடைக்கலை.காயலான் கடையில கூட தேடியாச்சு. படக்குனு ரோசனை வந்துது. ஸ்ப்ரிங்ஸை கழட்டி கேஸ் ஸ்டவ் மேல வச்சு பழுக்க காய்ச்சி ஐஸ் வாட்டர்ல போட்டுட்டு பஞ்சர் கடை பாயை ஃபிட் பண்ண சொன்னேன். பிரச்சினை ஓவரு. கையோட கையா மறுபடி ஃபுல் மூன், ஃபிஷ் ஸ்டிக்கர். இந்த எக்ஸ்பீரியன்ஸ் போதாதா உங்களுக்கு நம்பிக்கை வர்ரதுக்கு.

நாளையிலருந்து  1 ஆம் நெம்பர்ல ஆரம்பிச்சு ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? மைனஸை மைனஸ் பண்ண என்ன பண்ணலாம்ங்கறதை புட்டு புட்டு வச்சிர்ரன்.

புட்டுன்னது குட்டிங்க புஷ்பவதியாறதே ஞா வருது.. தூத்தேரிக்க .. வயசு 46.. திருந்தவே மாட்டமோ ?