Wednesday, December 12, 2012

சந்திரனுடன் பேட்டி : 2

அண்ணே வணக்கம்ணே !
நேத்தே சொன்னாப்ல இந்த காலண்டர் ப்ரிண்டிங் வேலை காரணமா சந்திரன் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்ள மொத 5 கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்திருக்காரு. மத்த கேள்விகளுக்கான பதில் நாளைக்கு. இந்த நிலை டிசம்பர் 15 வரைக்கும்  (இன்னம் 3 நாள் தேன்) . புரிஞ்சுக்கோங்க.

இப்பம் சந்திரனோட பதில்கள் :

1.கடலுக்கும் உங்களுக்கும் என்ன லிங்க்?
செரி.. செரி.. நீ பேட்டி எடுப்பது எப்படிங்கற புஸ்தவம் எதையோ படிச்சுட்டு கேள்வி கேட்கிறாப்ல இருக்கு. என்ன ரிலாக்ஸ்டா வைக்க இப்படி சாதா கேள்வி கேட்கிறேன்னு நினைக்கிறேன்.
 நதி எங்கே போகிறது கடலைத்தேடின்னு ஒரு பாட்டு இருக்குல்ல. அது கிராவிட்டிய பொருத்த விஷயம்.  அப்படி நதி கடலை சேரும் இடத்துல போய் நின்னுக்க.  நான் தேஞ்சுக்கிட்டு வர்ர காலம்னா அது இயல்பான கூடல் போல இயல்பா நடக்கும். அமாவாசைன்னா அரைத்தூக்கத்துல நடக்கிற கூடல் போலன்னு வச்சுக்க.

இதுவே பவுர்ணமி தினம் போய் நில்லு. ஊடலுக்கு பின்னான கூடல் போல இருக்கும்.கடலோட அலைகள் நதியை புறந்தள்ளிக்கிட்டிருக்கும்.  நதி நீர் கடலில் கலக்க ரெம்பவே மெனக்கெடனும். இதான்  கடல் நீர் மேல எனக்குள்ள கட்டுப்பாடு. இதுதான் கடலுக்கு என் பால் உள்ள கவர்ச்சி.

கடல் நீர் - ஹ்யூமன் பாடியில உள்ள வாட்டர் கன்டென்ட் - பனிக்குட நீர் இந்த 3 க்கும் உள்ள கெமிக்கல் காம்பினேஷன்3 ம் ஒன்னுதானாம்

இதனாலதேன் கடலை -கடலலையை நான்  பாதிக்கிறாப்லயே மனித உடலையும் என்னால பாதிக்க முடியுது. மனித உடலில் வாட்டர் கன்டென்ட் 90 சதவீதம்னா நம்ப முடியுதா?

2.ஹ்யூமன் பாடியில உள்ள நுரையீரலுக்கும் உங்களுக்கும் இருக்கிற கனெக்சனுக்கு அடிப்படை என்ன?
 நுரையீரல் -சுவாசிக்கும் உறுப்பு . சுவாசத்துக்கும் எண்ணங்களும் தொடர்பு உண்டு. எண்ணம் வேகமா இருந்தா சுவாசமும் வேகமா இருக்கும். எண்ணம் விவேகத்தோட இருந்தாசுவாசம் மெதுவா இருக்கும். மெதுவான சுவாசம் தீர்காயுளை கொடு்க்கும். நாய்க்கு 14 வருசங்கறாய்ங்க. அதனோட சுவாசத்தை கவனி.  ஆமையோட ஆயுள் சாஸ்திங்கறாய்ங்க.அதனோட ஆயுளையும் கவனி. எண்ணம் -மனம் - நுரையீரலுக்கு இடையில் உள்ள தொடர்பு இது. நான் மனோகாரகன்ங்கறதால இந்த 3 ஐயும் நான் பாதிக்கிறேன்.

3.உங்களுக்கு மனோகாரகன்னு ஏன் பேர் வந்தது?
பகல்ல சூரியனோட இம்பாக்ட் இருக்கும். சூரியன் என்றால் சுயம். ஈகோ. பகல் எல்லாம் மனிதனை ஈகோ வழி நடத்தும். எனக்கென்னடா கிங்குன்னு - நான் எல்லாம் ரிஷ்ய ஸ்ருங்கன் மாதிரி எவளுக்கும் மயங்கமாட்டேன்னு அலப்பறை பண்ணிக்கிட்டிருப்பிங்க . சூரியன் மறைஞ்சு நான் உதிச்சு உதிக்காததுக்கு மின்னயே மனசுல கொஞ்சம் கொஞ்சமா சஞ்சலம் -சபலம் ஆரம்பிச்சுரும். அந்த ஃபைலை கொடுக்கிறப்போ கொஞ்சம் கைய தொட்டிருக்கலாமோ மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பிச்சுரும்.

வளர்பிறை நாட்கள்ள எந்த பேச்சு வியாபாரியும் வந்து மோட்டிவேட் செய்யாமயே எல்லாரும் கொஞ்சம் பாசிட்டிவாவே இருப்பாய்ங்க.

மேலும் இந்த நாட்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.வேளைக்கு குளிச்சு ஃப்ரெஷ்ஷா இருக்க முடியும். எப்படியா கொத்த டென்ஷன்ல இருந்தாலும் ஒரு குளியல் போட்டா தெளிஞ்சுர்ரதை பார்க்கலாம். நானே ஜலகாரகன் .நானே மனோகாரன்ங்கறதால இந்த எஃபெக்ட். கொசுறு: வளர்பிறை நாட்களில்  நீச்சலடிக்க போயி சாவுன்னு செய்தி வராது.

ஏன்னா வளர்பிறை நாட்களில் மனிதனோட பாடியில வாட்டர் கன்டென்ட் புஷ்கலமா இருக்கும். வெளியிலிருந்து ஈரப்பதம் தேவைப்படாது.

இதுவே தேய்பிறை நாட்கள்ள  பாசிட்டிவ் அப்ரோச் கொஞ்சம் போல குறையும். தண்ணி பஞ்சம், மோட்டர் எரிஞ்சு போயிர்ரது.தண்ணி லாரி வராம போறது. இதனால் கடுப்பு,எரிச்சல் ,மனக்கசப்பு எல்லாம் தொடரும்.

மேலும் இந்த நாட்களில் நதியில் மூழ்கி சாவு செய்திகள் வர்ரத பார்க்கலாம். ஹ்யூமன் பாடியில வாட்டர் கன்டென்ட் குறையறதால வெளியிலிருந்து ஈரப்பதம் பெறும் முயற்சியே குளியல்,நீச்சல்லாம்.

அதுவும்  நான் சனியோட  சேரும்போது அடுத்தவுகளுக்கு விருப்பமில்லாத வேலைய கட்டாயப்படுத்தி செய்யவைக்கிறது ,செவ்வாயோட சேரும்போது கோப தாபம், ராகு/கேதுக்களோட சேரும் போது மனக்குழப்பம் நெகட்டிவ் தாட்ஸ் அதிகரிக்கிறது - நுரையீரல் -சிறு நீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவுகளுக்கு பிரச்சினை அதிகமாறதுல்லாம் சகஜமா நடக்கும்.

மனம் போன போக்கிலே கால் போகலாமான்னு பாட்டு இருக்குல்ல. இந்த நிலை  இரவு நேரங்களில் அதிகமா இருக்கும். என்னோட பலம் இல்லாத ஜாதகர்களுக்கே நடக்கும். மத்தவுகளுக்கும் நடக்கலாம். கோசாரத்துல என்னோட பலம் குறையும் போது.

4.பப்ளிக் சப்போர்ட்டுக்கு உங்க பலம் தேவைங்கறாய்ங்களே  அது ஏன்?
நான் ஜலகாரகன் -மனோகாரகன்னு சொன்னேன். ஜலத்தோட இயல்பு என்ன பள்ளம் நோக்கி பாய்வது.  நான் ஒரு ஜாதகத்துல பலம் பெற்றிருந்தா அந்த ஜாதகனோட மனசு ஆட்டோ மெட்டிக்கா அடித்தட்டு மக்கள் பற்றி யோசிக்கும். அவிகளோட நெருங்கி பழகுவான். எந்த காலத்துலயும் -எந்த சமுதாயத்துலயும் இவிக தானே மெஜாரிட்டி அதனால பப்ளிக் சப்போர்ட்டு நிச்சயம்.

5.சந்தையிலருந்து - மேரேஜ் ஹால் வரை ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் உள்ள இடங்களுக்கு நீங்கதேன் இன்சார்ஜாம்? இதுல உள்ள லாஜிக் என்ன?

என்னோட இயல்பு என்ன? வளர்ந்துக்கிட்டே போவேன் - பவுர்ணமி தினம் ஜாஜ்வல்யமா பிரகாசிப்பேன் -பிறகு தேய ஆரம்பிச்சுருவன்.

ஒவ்வொரு ராசியிலயும் பிரவேசிக்கும் போதும் மொத ஆறு மணி நேரம் கொஞ்சம் சுஸ்தா இருப்பேன். கடைசி ஆறுமணி நேரமும் இதே கதைதான். மத்தியில உள்ள 12 மணி நேரம் உங்க மனசை சகட்டு மேனிக்கு மாத்தி விட்டுக்கிட்டிருப்பேன்.

இதே நிலைய நீங்க மேற்படி ஃப்ளொட்டட் பாப்புலேஷன் உள்ள இடங்கள்ளயும் பார்க்கலாம். அதனால இந்த இடங்களுக்கு நான் இன்சார்ஜா இருக்கன்.

அடுத்து நான் பரபரன்னு ராசி மாறி போயிக்கிட்டே இருக்கிறாப்ல  மேற்படி இடங்களுக்கு வர்ரவன் கூட சந்தைன்னா விற்பனை முடிஞ்சதும் அல்லது பர்ச்சேஸ் முடிஞ்சதும் வீட்டை பார்க்க கழண்டுக்கறதுலயே இருப்பான். கண்ணால மண்டபம்னா வந்தவன் தாலிகட்டியாகட்டும் கிளம்பிரலாம்னே காத்திருப்பான்.  நான் எப்படி குறுகிய காலத்துல புது புது ராசிய பார்த்துர்ரனோ அப்படியே இந்த இடங்கள்ளயும் நீங்க புதுப்புது முகங்களை பார்க்கலாம்.