Friday, August 29, 2014

ரஜினி முதல்வராகனும்னா


ரஜினிக்கும் நமக்கும் உள்ள உறவு தெரியாதவுகளுக்கு மட்டும் சின்ன விளக்கம். சிவப்பு விளக்கை எரியவிட்டு தொழில் பண்ற பாலியல் தொழிலாளிக்கு கூட ஆதரவு தெரிவிச்சு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும்னு குரல் கொடுக்கிற கேரக்டர் நாம. அதே நேரத்துல பத்து பேரை முந்தானையில வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போட்டா மட்டும் கடுப்பாயிருவம். இதான் நம்ம  கேரக்டர்.

ரஜினி மட்டும் பாரதியார் கணக்கா "நடிப்பு எமக்கு தொழில்+வீட்டுக்குழைத்தல்"னு சொல்லிட்டு பெர்ஃபார்ம் பண்ணியிருந்தா "ஒழிஞ்சு போவட்டும் வயித்து பொளப்பு"ன்னு விட்டிருப்பம்.

ஆனால் இவரு எம்.ஜி.ஆர் கணக்கா -வாலி /வைரமுத்து -மற்றும் வசன கர்த்தாக்கள்  உபயத்துல கொள்கை முழக்கம்லாம் செய்துக்கிட்டிருந்து "அதெல்லாம் வசனம்யா -அந்த கேரக்டர் பேசின வசனம்யா"ன்னு அடிச்சு விட்டாரு பாருங்க. அங்கதான் ஏதோ படத்துல செந்திலை கனவுல கண்டு தலைகீழா குதிச்ச கவுண்டர் ஆயிட்டாரு ரஜினி.

என்னடா இது எல்லாம் கழுவி ஊத்தறதா இருக்குன்னு கழண்டுக்காதிங்க நெஜமாலுமே ரஜினி முதல்வராகனும்னா என்ன பண்ணனும்னு ஒரு ப்ளூ ப்ரிண்டும் கொடுத்துர்ரன்.

இன்னைக்கு புதியதலைமுறையில ஒருத்தர் மளிகை ஜாமான் லிஸ்டு கணக்கா போட்டாரு. ரஜினியோட அரசியல் எதிர்வினைகள் எல்லாமே தன்னை-தன்னவர்களை சார்ந்த விஷயத்துக்கானதா தான் இருந்தது. மம்மிக்கு எதிரா வாய்ஸ் கொடுத்ததுலருந்து - முந்தா நாள் "மோடி நெல்ல நிர்வாகி"ன்னு கேன்வாஸ் பண்ணதுவரை எல்லாமே தன் நலம் அல்லது தன்னவர் நலம் தான்.

(அதே விவாதத்துல எம்.ஜி.ஆரை விட ரஜினி பெரிய ஆள்னு ஒரு பார்ட்டி சொன்னதை சீரியசா எடுத்துக்கல. இல்லின்னா இந்த பதிவே அதை பத்தி தான் வந்திருக்கும்)

செரி செரி மேட்டருக்கு வந்துர்ரன்.ரஜினி முதல்வராகனும்னா அவரு என்ன பண்ணனும்னு சொல்லி விட்டுர்ரன்.

1.ஏற்கெனவே தனக்கு சொத்துக்களை வித்தவுகளை எல்லாம் காண்டாக்ட் பண்ணி ஒரு இடத்துல கூட்டி   மீடியா முன்னே "எக்காரணம் கொண்டும் நில ஆக்கிரமிப்பு வழக்கு போடமாட்டோம்"னு சொல்ல வச்சிரனும்.

2.ஐஸ்வர்யாவோட கடனை எல்லாம் பைசல் பண்ணி நோ ட்யூ சர்டிஃபிக்கேட் வாங்கிக்கனும்.

3.அரசாங்கத்துக்கும் தனக்கும் உள்ள டீலிங்கெல்லாம்  கரெக்டா இருக்கா. பார்த்துரனும். ( விதி மீறல்)  அதை எல்லாம் பைசல் பண்ணிரனும். மொதல்ல ஓட்டர் லிஸ்டுல பேர் இருக்கா பார்த்துரனும் -ஒவ்வொரு வாக்காளர் சேர்ப்புலயும் இதை ஃபாலோ அப் பண்ணிக்கனும்.

4.ரசிகர்களுக்கு வாக்களிச்ச கல்யாண விருந்தை ஒடனே நடத்திரனும்.( எவனும் அதுல பல்லி,பூரான்னு போட்டுவிட்டுராத பார்த்துக்கனும்.

5.நதி நீர் இணைப்புக்கு வாக்களிச்ச ஒரு கோடி ,கும்ப கோணம் பள்ளி பிள்ளைகளுக்கு வாக்களிச்ச உதவித்தொகை எல்லாம் பைசல் பண்ணிரனும்

6.முழு மேக்கப்போட ஒரு செட் போட்டு  ஒரு ஸ்பீச்சை ஷூட் பண்ணிக்கனும்.அதுல மொத அஞ்சு மினட் தான் எடுத்த தப்பான ஸ்டாண்டுக்கெல்லாம் மன்னாப்பு கேட்டுக்கனும். (முக்கியமா குசேலன் வசனத்துக்கு)  என் படத்துல வந்த எல்லா வசனம் - பாட்டுக்கு நான் தான் பொறுப்பு. நான் தான் ஓகே பண்ணேன்னு சொல்லனும்.

பாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது . எனக்கு சாதி இல்லை.மதம் இல்லை.மொழி இல்லை. நான் மனிதன். என் கொள்கை மனிதம் . என் இயக்கம் /கட்சி தனியானது. தேர்தலுக்கு பிறவு என்னால தனிச்சு ஆட்சி அமைக்க முடியாம போனா பா.ஜ.கவை தவிர ஆரு என் கட்சி கொள்கைகளை ஏத்துக்கிட்டு சனத்துக்கு நல்லது பண்ணுவாய்ங்களோ அவிகளை ஆதரிப்பேன்.மந்திரிசபையில சேர மாட்டேன்னு எச்சி மீஞ்சி சத்தியம் பண்ணனும்.

கட்சியோடகொள்கைகள்னு ஜஸ்ட் பத்து பாய்ண்ட். மட்டும் சொல்லனும்.
அ)எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஏழ்மை -அதற்கு காரணம்  விவசாயத்தை கைவிட்டது. பாசன வசதிகளை மேம்படுத்தாதது.  உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை விவசாயம் ஒன்னுதான். அதுக்கு டாப் மோஸ்ட் ப்ரியாரிட்டி கொடுப்பேன். தமிழக நதிகளை இணைப்பேன். இந்திய நதிகள் இணைப்புக்காக போராடுவேன்.
ஆ)வறுமை ஒழிய நதிகள் இணைக்கப்படனும்- இதனால் விவசாயம் செழிக்கும். படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு திருப்புவேன். விவசாய உற்பத்திகளை மதிப்பு கூட்டு முறைகளை அமலாக்கி விவசாயிகள் துணையுடன் மானில அரசே மார்க்கெட் பண்ணும்.  லாபத்துல விவசாயிக்கு சம பங்கு.

இ)மேற்படி மிஷன் நிறைவேற தடையா இருக்க கூடிய எல்லா நிர்வாக சீர்கேட்டையும் ஒழிச்சு கட்டிருவன். இந்த மிஷனோட பலன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வழி செய்வேன்.
இந்த செனேரியோல பத்து பாய்ண்ட் -அதையும் ஒரு அஃபிடவிட்டா ரிலீஸ் பண்ணனும்.

மேற்படி ஷூட்டோட டிவிடியை மீடியாவுக்கு ரிலீஸ் பண்ணி விட்டுரனும். எல்லாம் பேசி பேசி மாய்வானுங்க. இந்த கேப்ல கட்சி பதிவு-உறுப்பினர் பதிவு வேலையை எல்லாம் முடிச்சுரனும்.

விஸ்தாரமா ஒரு பிரஸ் மீட் (காலை 10 முதல் மதியம் 2 வரை ) 


7.கண்ணாலத்துக்கு வந்தவுகல்லாம் மொய் எழுதறாப்ல இந்த ஸ்பீச் -குறைஞ்ச பட்சம் ஹைலைட்சாவது எல்லா சேனல்லயும் டெலிகாஸ்ட் ஆயிரும்.

-இதுக்கப்பாறம் தேர்தலுக்கு ஆறுமாசம் வரை தமிழக  நதிகளை பக்கவாட்ல கவர் பண்றாப்ல ஒரு பொலிட்டிக்கல் டூர்.

தேர்தல் அறிவுப்பு வந்தபிறவு எல்லா ரசிகர்களையும் திரட்டிக்கிட்டு நதிகளை இணைக்க நானே கால்வாய் வெட்டறேன்னு மம்முட்டி,கடப்பாறையோட கிளம்பி கைதானா  சிரேஷ்டம்.

(ரஜினி மேல லவ்ஸ் இருக்கிற பார்ட்டிங்க கிண்டிவிட்டா மேலும் அவிழ்த்து விடுவேன்.இல்லின்னா அம்பேல்)