Wednesday, November 30, 2016

இந்திய நீதி அமைப்பே செத்துவிட்டது



மா.மி. உச்ச நீதிமன்ற /உயர் நீதிமன்ற  நீதியரசர்களுக்கு ஒரு திறந்த மடல் 
ஐயா !
எதுக்கெல்லாமோ தீர்ப்பு தரிங்க. கபாலிக்கெல்லாம் ராவோட ராவா தீர்ப்பு தர்ரிங்க. காவிரி பிரச்சினைல கர்னாடகா முரண்டு பிடிச்சா மட்டும் கண்டுக்க மாட்டேங்கிறிங்க. இப்படி ஆயிரம் சொல்லலாம்.

ஆனால் ஹியர் சேனு தள்ளிருவிங்க. என் சொ(நொ)ந்த கதைய சொல்றேன். அதுவும் மாவட்ட நுகர்வோர் மன்றம், மானில நுகர்வோர் மன்றம், மனித உரிமை கமிஷன், ஹை கோர்ட் ,சுப்ரீம் கோர்ட்டுன்னு நான் தட்டாத கதவே இல்லை . கதவு என்ன சன்னலை கூட திறக்கல நீதித்துறை.

அதுவும் மேட்டர் என்ன.. சாமானியப்பட்ட மேட்டரா ? இன்னைக்கு நாடே  நலிஞ்சு கிடக்க பண்ணிருச்சே இந்த கரன்சி ரத்து மேட்டரு இது உட்பட அஞ்சு அம்சம். இதை எல்லாம் அமலாக்க தேவையான நிதி சேகரிப்புக்கு ஸ்கெட்ச் எல்லாம் அடங்கின விஷன் டாக்குமென்டை மத்திய /மானில அரசுகளின் செவிட்டு காதுகளுக்கு கடத்த முயற்சி பண்ணி -அவனுவ பண்ண டார்ச்சருக்கு ரத்த கண்ணீர் விட்டு உங்க கோட்டைக்கு வந்தேன்.

என்ன ஒரு சோகம்னா /அதிர்ஷ்டம்னா என் பேர்ல எந்த சொத்தும் இல்லை. இருந்திருந்தா எல்லாத்தையும் வித்து கேஸ்போட்டு ரோட்டுக்கு வந்திருப்பன்.
ஆனாலும் மனசு கேட்குதா? அந்த காலத்துல ஒரு நாளைக்கு அஞ்சு பத்து கிடைச்சா என் குடும்பமே பசியாறிரும்ங்கற நிலையிலயும் பத்து இருபதுன்னு செலவழிச்சு  உச்ச நீதிமன்றத்துக்கும்/உயர் நீதி மன்றங்களுக்கும்  கூரியர்  மூலமா/பதிவு தபால் மூலமா  லெட்டர் அனுப்பினன்.

எதுக்குன்னா ? சனம் போடற லெட்டரையே ரிட் மனுவா ட்ரீட் பண்ணி கோர்ட் கீசிடும்னு ஏதோ ஒரு பாடாவதி பேப்பர்ல படிச்சு தொலைச்சுட்டன். அந்த நப்பாசையில தான் .

அதனாலதேன் எனக்கும்/இந்த நாட்டுக்கும் நடந்த இன் ஜஸ்டிஸை எல்லாம் கொளந்தைகளுக்கும் புரியறாப்ல ஒன்று இரண்டுன்னு வரிசைபடுத்தி ஆதியோடந்தமா அனுப்பினன் . நடவடிக்கை தான் இல்லை.

இப்பம் இந்த ஓப்பன் லெட்டரை படிச்சுட்டு கோதாவுல இறங்கி நடவடிக்கை எடுத்துருவிங்கன்னு சத்தியமா நான் நம்பல. பின்னே ஏன் எழுதறேன்னா.......
சமீப காலமா சட்டங்களை அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையதா இல்லையான்னு மட்டும் பார்க்கவேண்டிய நீங்க -எல்லா வேலையையும் முடிச்சு போட்டு சட்டங்கள் இயற்றும் நிலைக்கு வந்துட்டிங்களோனு தோன்றாப்ல பல தீர்ப்புகளை பார்க்கிறேன்.

இல்லிங்கய்யா உங்க வேலையே மலையா குவிஞ்சு கிடக்குன்னு ஞா படுத்தத்தேன் இந்த லெட்டரு . இதை புத்திசாலித்தனமா என் ப்ளாக்ல தான் போடப்போறேன்.

நமக்கு சத்ராதிங்க சாஸ்தி . எவனாச்சும் என்னை போட்டு கொடுக்க இதை இந்தியிலயோ /இங்கிலி பீஸுலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி புகார் பண்ணா கோர்ட் அவமதிப்புன்னாச்சும் என்னை கோர்ட்டுக்கு கூப்டுவிங்கல்ல .அதுக்குதேன்.

இந்த லட்டர்ல வருசம்/மாசம்/தேதில்லாம் போட்டா ஃபேஸ்புக்ல படிக்கிற சனம் தெறிச்சு ஓடிரும்.அதனால கதை மாதிரி சொல்லிர்ரன்.

என் லட்சியம் நதிகள் இணைப்பு. இதை இம்ப்ளிமென்ட் பண்ண தோதா ஒரு அஞ்சு அம்சம்/ அப்படியே திட்ட செலவுக்கு சனங்களை டார்ச்சர் பண்ணாம மானில அரசாங்கங்கள் பைசா புரட்ட கொத்து கொத்தா ஐடியாங்க. ஏறக்குறைய ஒரு தீசிஸ் மாதிரி இருக்க்கும்.

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல். 

தீசிஸ் தான் வேணம்னா அது இங்கே .

இந்த திட்டத்தை அமல்படுத்த சனங்களை டார்ச்சர் பண்ணாம மானில அரசாங்கங்கள் பைசா புரட்ட கொத்து கொத்தா ஐடியாங்க இங்கே 

இந்த இழவை எல்லாம் ரோனியோ போட்டு பெருசா பார்சல் கட்டி அன்னைக்கு இருந்த மத்திய ஆளுங்கட்சி கூட்டணி எம்பிக்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரி சபா நாயகருக்கு அனுப்பினேன். (1998) மவனுங்க கண்டுக்கல.

பிறகு எங்க தொகுதி எம்.பி ராமகிருஷ்ணா ரெட்டிகாருவுக்கு எழுதி -அவர் அவியளுக்கு எழுதி "பார்சலை காணோம்"னுட்டாய்ங்க.

இன்னொரு தபா ஒரே ஒரு பிரதி அனுப்பினா நாங்களே பிரதி எடுத்து அல்லா எம்பிக்களுக்கும் கொடுத்துர்ரன்னு லட்டர் போட்டானுவ. அனுப்பினன். அவ்ளதான் டீல்ல விட்டுட்டானுவ.

அன்னைக்கிருந்த சபா நாயகர் எங்க ஸ்டேட் காரரு. தெ.தேசம் கட்சிக்காரரு. ஆகவே இந்த மேட்டரை எல்லாம் சந்திரபாபுவுக்கு அனுப்பி என்னான்னு விஜாரிப்பானு ரிக்வெஸ்ட் பண்ணேன். அந்தாளு இன்னம்மோசம் .கண்டுக்கவே இல்லை.

நான் என்னவோ ஒரு தலைகாதலன் மாதிரி /நேர்த்திக்கடன் கணக்கா வாய கட்டி வவுத்தை கட்டி ரிமைண்டர்ஸ் அனுப்பிக்கிட்டே இருக்கன். ம...னா கூட யூஸ் இல்லாம போயிருச்சு.

ஒரு நாள் கடுப்பாகி யோவ் .. இந்த மேட்டர்ல நீ என்னதான் செய்யப்போறே /அல்லது என்னை என்னதான் செய்ய சொல்றே. ஒடனே பதில் போடு .ஒனக்கு போஸ்டேஜ் செலவு கூட வைக்க விரும்பல. இந்த பத்து ரூவாயை வாங்கிக்கிட்டு ஸ்டாம்ப் ஒட்டி பதில் போடுன்னு பத்து ரூவா எம்.ஓ அனுப்பினன்.

அதையும் டெலிவரி வாங்கிட்டானுவ. செரி பெய்டட் சர்வீஸாயிருச்சு. பதில் போட்டே ஆகனும்னு வெய்ட் பண்ணேன். ஒன்னும் பேரல. கன்ஸ்யூமர் ஃபோரத்துல புகார் பண்ணேன்.

இந்த மேட்டர் வார்த்தா மெய்ன் எடிஷன்ல பப்ளிஷ் ஆய்ருச்சா .பாபு ஒடனே பேதியாகி மொட்டைத்தாத்தன் குட்டையில விழுந்தான்னு ஒரு பதிலை அனுப்பி உட்டாரு .நிற்க கேசை கவனிக்கலாமா?

ஜூரிங்க இந்த கேஸ்ல "டெஃபிசியன்ஸி ஆஃப் சர்வீசே இல்லை"ன்னுட்டு சரித்திர பூர்வமான தீர்ப்பு கொடுத்துட்டாய்ங்க.ஸ்டேட் ஃபோரத்துக்கு அப்பீல் பண்ணேன். கீழ கொடுத்த தீர்ப்போட ஒரிஜினல் பிரதியை வைக்கலன்னு லட்டர் போட்டானுவ. நானும் மண்ணாந்தை கணக்கா அனுப்பிட்டன். அவ்ளதான் மேட்டர் ஓவர்.

திட்டம் போட்டு என் கிட்டே இருந்த ஆதாரங்களை எல்லாம் ஆட்டைய போட்டுட்டானுவ.அப்பத்தேன்  உங்களுக்கு  லட்டர் போடற வேலைய கையில எடுத்தன் .

இதோ நான் டிக்ளேர் பண்றேன் இந்திய நீதி அமைப்பே செத்துப்போச்சு. கொய்யால தில் இருந்தா என் மேல நடவடிக்கை எடுங்க. உங்க வண்டவாளத்தை எல்லாம் .இப்பமே தண்டவாளத்துல ஏற்றிட்டன்.

என்மேல நடவடிக்கை பாய்ஞ்சா இந்த வண்டவாளம்லாம் நாலு கால்பாய்ச்சல்ல பரவும். ஓகேவா ..உடுங்க ஜூட்டு

இந்த மிஷனை இதோட நிறுத்திட்டு ரிட்டையர் ஆயிட்டன்னு நினைச்சுராதிங்க. அசராம அடிச்சு விளையாடிக்கிட்டே இருக்கேன். அதை எல்லாம் ஏன் இங்கே சொல்லலின்னா இந்த காலகட்டத்துலயே நீதிபதிங்க பவிசு என்னன்னு தெரிஞ்சுட்டதால -அவியளுக்கு லட்டர் போட்டா காசு தான் வெட்டின்னு தெரிஞ்சுட்டதால லட்டரே போடல எசமான் . புகாரே பண்ணாம நடவடிக்கை எடுக்கலைன்னு புகார் பண்ணக்கூடாதுல்ல.

இந்த மிஷனோட லேட்டஸ்ட் ட்ரென்ட் வேணம்னா கீழ் காணும் தொடுப்புகளை பாருங்க.

change.org/p/sri-narendramodi-suggestions-to-modi-for-skill-india
http://anubavajothidam.com/?p=12051
http://anubavajothidam.com/?p=12117
http://kavithai07.blogspot.in/2016/09/blog-post.html

இவன் செரியான பைத்தாரனா இருக்கான். இவன் ரோசனைல்லாம் சொத்தைன்னு நினைச்சுராதிங்க எசமான் என்னோட பல ஐடியாக்களை அன்னைக்கே சந்திரபாபு சுட்டு அமல்படுத்தினாரு .திதிதேவஸ்தானம் காரவிக சுட்டாய்ங்க. இவ்ள ஏன் இன்னைக்கு ஸ்ரீமான் மோதிஜியோட அலுவலகம் கூட சுட்டிருக்கு. அந்த கதை வேணம்னா இங்கே பாருங்க.

கரன்சி ரத்து மேட்டரை சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்துலயே சொல்லிட்டனே .

குறிப்பு:2
இணைய உலகத்துல காப்பி பேஸ்டெல்லாம் சகஜம். எவனோபெத்த பிள்ளைக்கு தன் இனிஷியலை போட்டுக்கற சனம் சாஸ்தி.அதனால தான் எனக்குன்னு ஒரு ஸ்டைல் /ஒரு ஸ்லாங் ஏற்படுத்திக்கிட்டன்.

இதை எவன் எடுத்து போட்டாலும் நம்ம சரக்குன்னு தெரிஞ்சுரும்ல .ரீரைட் பண்ணா கிளிஞ்சிரும். அதே நேரத்துல இந்த ஸ்லாங்ல எதை சொன்னாலும் நக்கலாவே தோனும். ஆனால் மேட்டர் ரெம்ப சீரியஸ். மேட்டருக்காவ தூக்குல போட்டாலும் சம்மதம்தான். அதுக்காவ இந்த ஸ்லாங்கை ஒரு காரணமாக்கிராதிங்க.