Saturday, October 14, 2017

ஜோதிடத்தில் ஜெனட்டிக் ஃபீச்சர்ஸ்







அண்ணே வணக்கம்ணே !

நம்ம வலைப்பூ /வெப்சைட்ல இருந்தே ஒரு ஆயிரம் பக்கம் வரை பீராய்ஞ்சு வச்சுக்கிட்டு உபமானம்/உபமேயம் /சொந்த கதை / உபகதை /உதாரணம்லாம் களிச்சுட்டே வரலாம். எங்கயாச்சும் எதையாச்சும் திராட்டுல விட்டிருந்தா ஃபில் அப் பண்ணிரலாம்னு தான் நினைச்சேன்.



ஆனால் திடீர்னு ஒரு எண்ணம் ஸ்பார்க் ஆச்சு. ஒரு வேளை இதுவே நீ எழுதற கடைசி புஸ்தவமா இருந்தாலும் இப்படித்தான் செய்வயா?



நோ 'ன்னுட்டு நாலு திசையா தலையை அசைச்சு  பெரிய எழுத்துல  அலறி ஜெராக்ஸ் பேப்பர் ஒரு பண்டல் வாங்கி வச்சுக்கிட்டு எழுத ஆரம்பிச்சேன்.



லேப்டாப்ல அடிக்கிறதுக்கும் -எழுதறதுக்கும் உள்ள வித்யாசம் நமக்கு தெரிஞ்சதுதேன். அடிக்கடி சொல்லியும் இருக்கேன். ஆனால் எழுத எழுத அப்டியே கொட்டுது . இதுவரை டச்சு பண்ணாத கோணம்லாம் அப்டியே கர்ணன் கேமராவுல ஜோதிடலட்சுமி உள்ளாடை மாதிரி தர்ம தரிசனம்.



எழுதி எழுதி ஒரு ஃப்ளோ வந்திருச்சு. காயிதத்துல எழுதி ( நேர்மையா சொன்னா கிறுக்கி) மறுபடி அதை தட்டச்சி ஜனவரி 14 க்குள்ள புஸ்தவமா வெளிய வரனும்னா முப்பது முக்கோடி தேவர்களும் கூட்டணி போட்டாதான் வேலைக்காகும். ஏன் டைரக்டா டைப் பண்ண கூடாதுன்னு ஒரு கெட்ட எண்ணம். அதான் இந்த பதிவு .



மொதல்ல ராகு கேதுக்கள் - பிறவு பூர்வ புண்ணிய ஸ்தானம் -அடுத்து மாத்ரு பாவம் ஃபினிஷ் ஆயிருச்சு. என்னய்யா இது இப்படி ஜம்ப் ஆகுதுன்னு மெர்சலாயிராதிய. ஒரு புதிய சரடு கிடைச்சது . ஒவ்வொரு ரத்தினமா கோர்த்துக்கிட்டிருக்கன். ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கிட்டு நோண்டி நுங்கெடுத்துருக்கம்.



இப்ப ஒன்பதாம் பாவம். இதை தான் இன்னைக்கு/ நாளைக்கு  பதிவா போட உத்தேசம் (புக் ஒர்க் நடக்கும் போது லட்டா எடுத்து சேர்த்துக்கலாம்ல)

__________

ராகு கேதுக்களிடமிருந்து வம்சவிருட்சத்தின் பாசிட்டிவ் ஜெனட்டிக் ஃபேக்டர்ஸ் / ஐந்தாம்பாவத்தின் வழி தன் வாழ்வின் இறுதி இலக்கு குறித்த  உள்ளார்ந்த புரிதல் / தாயிடம் இருந்து ரெசிப்டிவ்னெஸ் ஆகியவற்றை பெறும் குழந்தை ஒன்பதாம் பாவத்தில் இருந்து ஆண் தன்மையை பெறுகிறது .

இயற்கையுடனான ஊடாடுதலில் தாயிடம் இருந்து பெற்ற  ஏற்புத்தன்மை எந்தளவுக்கு அவசியமோ - உலகத்தோடு /உலகமக்களோடு ஊடாடுதலில் தந்தையிடம் இருந்து பெறும் போராட்டகுணமும் அந்தளவுக்கு அவசியமே.